Breaking News

கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் வலயமட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகளில் சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள், வலயமட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகளில் பங்குபற்றி பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இப்போட்டிகளில், இப்பாடசாலை மாணவர்கள் விசேட கூத்துப் போட்டியிலும், கவிதை ஆக்கப் போட்டியிலும் முதலாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 அத்துடன் வடமோடிக் கூத்துப் போட்டியில் இரண்டாம் இடத்தினையும், வில்லுப்பாட்டுப் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

இவற்றுள் முதலாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட கவிதை ஆக்கம் மற்றும் விசேட கூத்து ஆகிய போட்டிகள், அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள மாகாண மட்டப் போட்டிகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மாணவர்களின் இந்தச் சிறந்த வெற்றிக்காக பாடசாலைச் சமூகம் மற்றும் பெற்றோர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.








No comments