Breaking News

தாய்மொழி தின நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள் இன்று பாடசாலையில் கொண்டாடப்பட்டன.


 பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கலை, கலாசார மற்றும் பண்பாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. 


இவ் விழாவின் ஒரு முக்கிய அங்கமாக, தமிழுக்கு அரும்பணியாற்றிய 193 சான்றோர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அவர்களின் தமிழ்த்தொண்டு நினைவு கூரப்பட்டது.


 இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இப்பாடசாலையில் ஆண்டுதோறும் தாய்மொழி தினத்தை முன்னிட்டு இவ்வாறான ஆக்கபூர்வமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




























No comments