மனோன்மணி நித்தியானந்தன் ஆசிரியருக்கு பாராட்டு
ஓய்வு பெற்று செல்லும் மனோன்மணி நித்தியானந்தன் ஆசிரியருக்கு பாடசாலை சமூகத்தினரால் மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாடசாலையில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் சேவை செய்த குறித்த ஆசிரியரின் கல்விச் சேவையை மதிக்கும் வகையில் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய சேவைகள் நினைவுகூரப்பட்டதுடன், எதிர்கால வாழ்விற்கு மனப்பூர்வமான வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.






No comments