புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் தரம் 6 பெற்றோருக்கு விழிப்புணர்வு
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் தரம் 6 பெற்றோருக்கு விழிப்புணர்வு நிகழ்வு
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக, தரம் 6 மாணவர்களின் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 8ம் திகதி பாடசாலையில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் புதிய கல்வி முறையின் நோக்கங்கள், பாடத்திட்ட மாற்றங்கள், மதிப்பீட்டு முறை மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோரின் பங்கு குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. பெற்றோர் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், கல்வி சீர்திருத்தம் குறித்து புரிதலை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ. துசாந்தன் இது தொடர்பான விளக்கங்களை வழங்கினார்
பெற்றோர் புதிய கல்வி மாற்றங்களை புரிந்து கொண்டு மாணவர்களுக்கு சிறந்த ஆதரவு வழங்கும் நோக்கில் இவ்விழிப்புணர்வு நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.





No comments