இரு மாணவர்கள் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் இருவர் தேசியமட்ட சதுரங்க போட்டிக்கு தெரிவாகி உள்ளனர்.
இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மட்ட போட்டியிலேயே வெற்றியீட்டி தேசிய மட்டப்போட்டிக்காக ரி.ரிசானுஜன், இ.யுவேனிக்கா ஆகிய இரு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று குறித்த போட்டியில் பங்கேற்ற யோ.ஹர்சாயினி, ஜீ.ஜஸ்மின்ஸ்ரபி ஆகிய மாணவர்கள் மெரிட்டையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறித்த போட்டியில் இப்பாடசாலையைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments