5 மாணவர்களின் பெற்றோருக்கான தரவட்டக் கூட்டம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களின் பெற்றோருக்கான தரவட்டக் கூட்டம் இன்று பாடசாலையின் அதிபர் வ.துசாந்தன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு உறுதுணையாகவும் பங்களிப்பாகவும் இருந்த பெற்றோர்களுக்கு அதிபர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலக் கற்றல் செயற்பாடுகள், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பாடசாலைச் செயற்பாடுகளில் பெற்றோர்கள் தொடர்ந்து வழங்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் பாடசாலை அதிபர் வ.துசாந்தன், ஆசிரியர்கள் மற்றும் தரம் 5 மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






No comments