தரம் 4 மாணவர்களின் பெற்றோருக்கான கலந்தாய்வுக் கூட்டம்!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 4 மாணவர்களின் பெற்றோருக்கான தரவட்டக் கூட்டம் இன்று பாடசாலையின் அதிபர் வ.துசாந்தன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், தரம் 4 மாணவர்களின் கல்வி அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்காக இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து அதிபரினால் பெற்றோர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைவதை இலக்காகக் கொண்டு, அதற்காக ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் பெற்றோர்கள் வழங்கிட வேண்டிய பங்களிப்புகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆழமாக ஆராயப்பட்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பாடசாலை அதிபர், தரம் 4 கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






No comments