Breaking News

மாவட்ட சதுரங்கப் போட்டியில் மாணவர்கள் சாதனை: மாகாண போட்டிக்குத் தெரிவு!

பாடசாலை சதுரங்க சங்கத்தினால் மட்டக்களப்பு சிவானந்த தேசிய பாடசாலையில் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட ஒற்றையர் சதுரங்கப் போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில் இப்பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் 'மெரிட்' (Merit) வெற்றிகளைப் பெற்று, மாகாணமட்ட சதுரங்கப் போட்டிக்காக தகுதி பெற்றுள்ளனர். தரம் 6 இல் கல்வி பயிலும் இ.யுவேனிக்கா, ரி.ரிசானுஜன், ஜீ.ஜஸ்மின்ஸ்ரபி மற்றும் தரம் 9 இல் கல்வி பயிலும் ஜீ.ஜஸ்மின்ஸ்ருதி ஆகிய மாணவர்களே இவ்வாறு மாகாணமட்டப் போட்டிக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.






No comments