பரிசளிப்பு விழா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் 02.04.2026ஆம் திகதி பரிசளிப்பு விழா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடந்த 2025ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இணைப்பாடவிதான போட்டிகளில் கோட்ட, வலய, மாவட்ட மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்கள், 100வீதம் வரவினைப் பெற்ற மாணவர்கள், சேமிப்பு திட்டத்தில் இணைந்து சேமிப்பு கணக்கினை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் மாணவர்கள் ஆகியோர் பாராட்டப்பட்டு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரின் ஆக்கங்கள் அடங்கிய “நுலைஒளி” சிற்றிதழும் வெளியீடு செய்யப்பட்டன.











































No comments