தரம் 1 மாணவர்களின் பெற்றோருக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு
தரம் 1 மாணவர்களின் பெற்றோருக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று பாடசாலையில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில், தரம் 1 மாணவர்களின் கல்வி ஆரம்ப கட்டம், பாடசாலை நடைமுறைகள், மாணவர்களின் ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் பெற்றோர்–பாடசாலை ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பெற்றோருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பெற்றோர் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பெற்றோர் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இச்செயலமர்வு பெற்றோரிடையே நல்ல புரிதலை ஏற்படுத்தியதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.




No comments