தேர்ச்சி அறிக்கை வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இரண்டாம் தவணை மதிப்பீட்டுப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பாராட்டி தேர்ச்சி அறிக்கை வழங்கும் செயற்பாடு இன்று(07) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் பு.சதீஸ்குமார் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட வாய்ப்பாடு போட்டி, எண்ணுதல் போட்டி, உறுப்பமைய எழுதுதல் போட்டி, சதுர கணிதப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
No comments