தூய்மையான இலங்கை விசேட வேலைத்திட்டம்
சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை நிர்மானித்தல் எனும் கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திலும் இன்று(09.07.2025) ஆம் திகதி நடைபெற்றது.
காலை 08.00மணி தொடக்கம் 8.30மணி வரை தேசியகொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல், இறைவணக்கம், வரவேற்புரை இத்திட்டத்தின் நோக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தில் மு.ப.08.30 – மு.ப.10.30மணி வரை பாடசாலையில் காணப்பட்ட பல்வேறு இடங்கள் பெற்றோர்களினாலும், மாணவர்களினாலும் தூய்மைப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து பெற்றோர்களுக்கு சுகாதாரம் ஆரோக்கியம் தொடர்பிலும், உணவுப்போசனை பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு சூழல்விழியம் மற்றும் தியானப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இச்செயற்பாடுகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பங்கெடுத்தனர்.
No comments