சிறுவர் விளையாட்டில் மூன்று அணிகள் வெற்றி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டமட்ட சிறுவர் விளையாட்டு நிகழ்வில், கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மூன்று கலப்பு அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற போட்டியிலேயே குறித்த பாடசாலையைச் சேர்ந்த தரம் 4, தரம் 5 கலப்பு அணிகள் முறையே முதலிடங்களையும் தரம் 3 அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்று வலயமட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
No comments