மாணவர் விழுமியம், சமூக சீர்கேடுகள் தொடர்பில் கலந்துரையாடல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் மாணவர்களின் ஒழுக்கம், விழுமிய பண்புகள், சமூகசார் பிரச்சனைகள் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உடனான கலந்துரையாடல் இன்று(28.08.2025) பாடசாலையில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ. துசாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலக அறநெறி பாடசாலைகளுக்கான பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர், போதை ஒழிப்புக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர் பிரிவிற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அறநெறி பாடசாலையை வினைத்திறனாக நாடாத்துதல், வரவு ஒழுங்கீனமான மாணவர்களின் வரவை அதிகரிப்பதற்கான செயற்பாடு, பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத கசிப்பு போன்ற விடயங்களை தடுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
No comments