Breaking News

பெற்றோர்களுக்கான அடைவு மட்டக்கூட்டம்

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பெற்றோர்களுக்கான அடைவுமட்டம் தொடர்பான பகுப்பாய்வு கூட்டம் 07.05.2025ஆம் திகதி நடைபெற்றது. 

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மாணவர்களின் புள்ளிகள் தொடர்பில் பெற்றோர்களுக்கு முன்வைப்பு செய்யப்பட்டதுடன், குறைவான வரவு மற்றும் புள்ளிகள் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுடன் வீட்டுச்சூழல், சுயகற்றலுக்கான ஏற்பாடு, பெற்றோரின் ஒத்துழைப்பு, பயிற்சிகொப்பிகள் பார்வையிடல், பொழுதுபோக்கு போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. மேலும் இரண்டாம் தவணையில் புள்ளிகளை அதிகம் பெறவைப்பதற்கான செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன. இதன்போது வகுப்பாசிரியர்களும் தங்களது செயற்பாடுகள் குறித்தும் கருத்துத் தெரிவித்தனர்.




No comments