திறன் பலகையில் முன்வைப்பு செய்யும் மாணவர்கள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் மாணவர்களின் முன்வைப்பு திறனை விருத்தி செய்யும் செயற்பாட்டின் கீழ் திறன் பலகை ஊடாக முன்வைப்பில் இன்று(03.04.2025) தரம் 9 மாணவி செல்வி.யோ.டிசானா ஈடுபட்டார்.

பாடசாலை அதிபர் வ.துசாந்தன் அவர்களின் எண்ணக்கருவிலும், ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாட்டிற்கு வித்தியாலய ஆசிரியர் திருமதி.சுகனியா பவானிதன் வழிகாட்டல்களையும், உதவிகளையும், அதற்கான பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றார்.





 

No comments