தரம் 5 மாணவர்களின் பெற்றோருக்கு தரவட்டக்கூட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களின் பெற்றோர்களுக்கான அடைவுமட்ட அபிவிருத்தி தொடர்பான தரவட்டக்கூட்டம் இன்று(03.04.2025) இடம்பெற்றது.

வித்தியாலய தரம் 5இன் வகுப்பாசிரியர் ம.கேதீஸ்வரன் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதன்போது தரம் 5மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.






No comments