கரகப்பயிற்சி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஆர்வமும் விருப்பும் கொண்ட மாணவர்களுக்கு கரகப்பயிற்சி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
இணைப்பாடவிதான செயற்பாட்டின் மூலமாக மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்தல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையிலும் எண்ணக்கருவிலும் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாட்டினை வித்தியாலய ஆசிரியர் ம.கேதீஸ்வரன் மாணவர்களுக்கு வழங்கி இச்செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றார்.
மாணவர்களது கிரகித்தல், மனனம், உடலாரோக்கியம், உளமகிழ்ச்சி, பாரம்பரிய கலைசார் செயற்பாடுகளை இளம் சமூகத்திற்கு கடத்துதல் போன்றவற்றை முக்கியநோக்காக கொண்டு இச்செயற்பாடு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
No comments