பரிசளிப்பு விழா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா இன்று(11.04.2025) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 2024இல் தேசிய பரீட்சைகளில் சாதித்தவர்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வெற்றியீட்டியவர்கள், தவணைப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள், 100வீத வரவினைக் கொண்ட மாணவர்கள் ஆகியோர் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
11.04.2025
Post Comment
No comments