இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(18.02.2025) இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்ச்சிகள் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றன.

இதன்போது அதிதிகள் பாடசாலை மாணவர்களால் வேண்ட் வாத்தியம் முழுங்க அழைத்துவரப்பட்டனர். பின்னர் கொடியேற்றல், மங்கல விளக்கேற்றல், மைதானப்பவணி, அணிநடை மரியாதை, விளையாட்டு நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கண்காட்சி, கராத்தே போன்றனவும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், கணக்காளர் கணேசமூர்த்தி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன், உதவிக்கல்விப் பணிப்பாளர் சந்திரகுமார், உதவிக்கல்விப்பணிப்பாளர் பு.சதீஸ்குமார் எனப்பலரும் கலந்துகொண்டனர்.  
































No comments