மாதிரி பாடசாலை வேலைத்திட்ட கலந்தாலோசனை
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தினை மாதிரி பாடசாலையாக மாற்றும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து ஆசிரியர்களுடனான சந்திப்பு இன்று(11.03.2024) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் பு.சதீஸ்குமார் கலந்து கொண்டார். இதன் போது பாடசாலை சூழலை அழகுபடுத்தல், வகுப்பறை கவின்நிலை, இணைப்பாட, பாட அடைவு மட்டங்களை விருத்தி செய்தல் போன்ற விடயங்கள் பற்றி இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டன.
No comments