Breaking News

மாவட்ட பண்பாட்டு நிகழ்வில் கலை, விளையாட்டு நிகழ்வுகள் ஆற்றுகை

மட்டக்களப்பு மாவட்ட பண்பாட்டு நிகழ்வு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரியில் இன்று(22.12.2018) ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் மட்டக்களப்பு கல்லடி விபுலானந்தர் சமாதியில் இருந்து, தொழிநுட்பகல்லூரி வரை சென்ற ஊர்வலத்தில் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளையும் தொழிநுட்பக்கல்லூரியில் விளையாடிக்காண்பித்தனர்.



இம்மாணவர்களை வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன், ஆசிரியர்களான செ.கந்தசாமி, வ.துசாந்தன், இ.குகநாதன் ஆகியோரும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களும் அழைத்து சென்றிருந்தனர்.