Breaking News

தேசிய மட்டத்தில் சாதித்த மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு.

கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற, தேசிய ரீதியில் சமூக விஞ்ஞானப்போட்டியில் தரம் 7ல் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட பு.ரிசாந்தன் என்ற மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று( ) இடம்பெற்றது.


வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், கிராமசேவை உத்தியோகத்தர் க.சுவேந்திரன், கிராம அமைப்புக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, வித்தியாலய ஆசிரியர்கள், சமூக அமைப்புக்கள், பழைய மாணவர் சங்கம், ஆர்வலர்கள் ஆகியோரினால் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.