இராமகிருஸ்ணமிசனால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் இடர்படும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுக்கும் செயற்றிட்டத்தின் கீழ், கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.
உபகரணங்களை கல்லடி உப்போடை இராமகிருஸ்ணமிசன், குறித்த கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் மற்றும் இராமகிருஸ்ணமிசன் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Post Comment