புதிய மலர்களை வரவேற்ற பாடசாலை
தரம் 1 மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இனிதே இன்று (29) நடைபெற்றது
எமது பாடசாலையில் தரம் 1 இல் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பாடசாலை நுழைவாயிலில் வைத்து புதிய மாணவர்கள் மாலை அணிவித்து, சிரேஷ்ட மாணவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
தேசியகொடி, தேசிய கீதம், பாடசாலை கொடி, பாடசாலை கீதம் இசைக்கப்பட்டது மங்கள வாத்தியங்கள் முழங்க, விருந்தினர்கள் மற்றும் மாணவர்களால் குத்துவிளக்கேற்றி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாணவர்களின் வரவேற்பு நடனங்கள் மற்றும் பாடல்கள் புதிய மாணவர்களை மகிழ்வித்தன.
பிரதமரின் வாழ்த்து செய்தி இதன்போது வாசிக்கப்பட்டது.
வலய தமிழ் பாட இணைப்பாளர் பு.சதீஸ்குமார் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


















No comments