Breaking News

பண்பாட்டு நிகழ்வுகளில் வெற்றி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் கலை இலக்கிய கூடம் நடாத்திய போட்டியில் வெற்றியீட்டியுள்ளனர்.

குறித்த மாணவர்கள், காவடி நடனம் போட்டியில் முதலிடத்தினையும், வசந்தன் கூத்துப்போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் இன்று காலைக்கூட்டத்தின் போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, அவர்களை பயிற்றுவித்த ம.கேதீஸ்வரன் ஆசிரியரும் சான்றிதழ், பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 





















No comments