சுரக்சா காப்புறுதி தொடர்பிலான விழிப்புணர்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(25.04.2025) சுரக்சா காப்புறுதி தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அரசினால் முன்னெடுக்கப்படும இலவச வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், காப்புறுதியினால் மாணவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய  நன்மைகள் குறித்தும், அதற்காக சமர்பிக்கவேண்டிய ஆவணங்கள் தொடர்பிலான முழுமையான விளக்கங்களை வித்தியாலய அதிபர் இதன்போது பெற்றோருக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது மாணவர் காப்புறுதி அட்டையும் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. இதில் வித்தியாலய சுரக்சா காப்புறுதி நிகழ்ச்சி திட்ட பொறுப்பாசிரியர் கோ.சதுசன் கலந்துகொண்டு அட்டைகளை வழங்கினார்.








No comments