Breaking News

கற்பித்தல் உபகரண தயாரிப்பில் பெற்றோர்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(11) புதன்கிழமை கற்பித்தல் உபகரண தயாரிப்பில் பெற்றோர்கள் ஈடுபட்டனர்.

தரம் 2 மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் பொருட்டு பெற்றோர்களின் பங்கினையும், ஒத்தழைப்பினையும் பெறும் வகையிலும், மாணவர்களுக்கான வகைசொல்லிகளாக பெற்றோர் மாறுதல் மற்றும் கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்தினை பெற்றோர் விளக்கிக்கொள்ளுதல் போன்ற பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் வித்தியாலய அதிபரின் வழிகாட்டலும் ஆலோசனைக்கும் சிந்தனைக்கும் அமைய இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இச்செயற்பாட்டில் வகுப்பாசிரியர் திருமதி மனோன்மணி நித்தியானந்தன் உடன் பெற்றோர்கள் இணைந்து செயற்பட்டனர்.







No comments