தைப்பொங்கல் விழா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் பொங்கல்விழா இன்று(16) இடம்பெற்றது.
இதன்போது தரம் 6 – 11 வரையான வகுப்புக்களைச் சேர்ந்த ஒவ்வொரு வகுப்புக்களும் ஒவ்வொருவிதமான பொங்கல்களை பொங்கி பூசை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இதன்போது இடம்பெற்றது.
No comments