இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள், வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று(09) இடம்பெற்றன.
ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜின் உத்தியோகபூர்வ ஆரம்பிப்புடனும் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் குறுந்தூர ஓட்டங்கள், அஞ்சல் ஓட்டங்கள், சிறுவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் போன்ற நிகழ்வுகளும், அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, யோகாசனம் போன்றனவும் நடைபெற்றன.