மிதி வெடில் தொடர்பிலான கருத்தரங்கு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் மிதி வெடில் தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(17.10.2024) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த கருத்தரங்கில் மக்(அயப) நிறுவனத்தினர் வளவாளர்களாக கலந்து கொண்டு விழிப்புணர்வினை மேற்கொண்டனர்.
கருத்தரங்கின் நிறைவில் மாணவர் ஒருவர் தான் மிதிவெடில் ஒன்றினை கண்டதாக கூறினார். அதற்கமைய மக் நிறுவனத்தினர் உரிய இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது மிதிவெடில் என இனங்காணப்பட்டதுடன், கிராமசேவையாளர், பொலிஸாருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இராணுவத்தினரால் குறித்த மிதிவெடி செயலிழக்கம் செய்யப்பட்டது.
No comments