அடைவு மட்ட விளக்கமளிப்பு
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் செயற்பாடு இன்று இடம்பெற்றது. பாடசாலையில் முதன்முறையாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றிய 2011 ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையான பெறுபேறு தொடர்பில் பாடசாலையின் அதிபர் வ.துசாந்தன் ஆசிரியர்களுக்கு விளக்கமளித்ததுடன் 2023ஆம் ஆண்டிற்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் தற்போதை நிலை தொடர்பிலும், மாணவர்களின் அடைவு வீதத்தினை அதிகரிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு மாணவர்களுக்கு எவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்வது என்பது தொடர்பான திட்டமும் தயாரிக்கப்பட்டது.
No comments