Breaking News

சித்திரை மாதத்தில் பிறந்த மாணவர்களின் பிறந்த தின கொண்டாட்டம்

  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சித்திரை மாதம் பிறந்த தினத்தினைக் கொண்ட மாணவர்கள் அனைவரையும் இணைத்த பிறந்த தின கொண்டாட்டம் இன்று(03.05.2023) புதன்கிழமை காலைக்கூட்ட வேளையில் இடம்பெற்றது.


இதன் போது, மாணவர்களினால் வாழ்த்துப்பாடல் பாடப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


வித்தியாலயத்தின் அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றிருந்தமையுடன், குறித்த செயற்பாட்டை ஆசிரியர்கள் ஒழுங்குபடுத்தி மாதாந்தம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments