Breaking News

2018ம் ஆண்டிற்கான சுகாதார கழக உறுப்பினர்கள் தெரிவு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டிற்கான சுகாதார கழக அங்கத்தவர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று(2018.02.06) இடம்பெற்றது.


வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அபிவிருத்தி உத்தியோகத்தர் குகராஜ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.சுபாஸ்கரன், கிராமசேவை உத்தியோகத்தர் க.சுவேந்திரன் வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது, சித்திரப்போட்டியில் கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.