தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 2மாணவர்கள், புதிதாக இணைந்து கொண்ட தரம் 1மாணவர்களை பாடசாலையின் வாயிலில் இருந்து மாலை அணிவித்து, கைலாகு கொடுத்து பாடசாலைக்குள் வரவழைத்தனர். மேலும் பாடசாலைக்குள் அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு இனிப்புக்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Post Comment